அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மற்றும் நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற / பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை 30.12.2021க்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.