அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு,
பள்ளிகளில் 9, 10,11 மற்றும் 12ம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதனை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்கள்.
- அருகில் உள்ள பொது சுகாதார நிலைய மருத்துவர், வட்டார மருத்துவஅலுவலரின் கைபேசி எண்களை தலைமையாசிரியர் வைத்திருக்க வேண்டும்.
- மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் முகவசத்துடன் வருகைபுரிய வேண்டும்.
- தினமும் சோப்பினால் கைகளை கழுவியபின்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை வேண்டும்.
- தினமும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்து பதிவேடுகளில் பராமரிக்கப்படவேண்டும்.
- மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் எவருக்கேனும் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சார்ந்த மருத்துவரை அனுக வேண்டும்.
- மாணவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு 6 அடி இடைவெளியில் ஒரு அறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமரவைத்து வகுப்புகள் செயல்பட வேண்டும்.
- மாணவர்கள் உணவு, தண்ணீரை பரிமாரிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் ஆசிரியர்களை கொண்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
- சத்துணவு உண்ணும் மாணவர்களை போதிய இடைவெளியில் அமரவைத்து சுகாதாரமான சூழ்நிலை ஏற்படுத்திட வேண்டும்.
மேலும் இணைப்பில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கண்டிப்பாகக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்