2020-2021 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2020-2021ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பயின்ற மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள்              19-07-2021 அன்று காலை 11.00 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் (www.dge.tn.gov.in)  இணையதளத்திற்கு சென்ற தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள user ID மற்றும் Password பயன்படுத்தி மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் மூலமாகமாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியும் வகையில் தெரியபடுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட படிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.

இணைப்பு

TML Downloading for Schools

12th result release press notification

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.