அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அரசு உதவித்தொகையாக ஒரு பெற்றோர் இழந்த மாணவ/மாணவியருக்கு ரூ.3 லட்சமும், 2 பெற்றோர்களையும் இழந்து ஆதரவற்றிருக்கும் மாணவ/மாணவியருக்கும் ரூ.5 லட்சம் மற்றும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ / மாணவியர்கள் விவரங்களை அருகாமையில் உள்ள அங்கன்வாடி மைய அலுவலர்களிடம் தெரிவிக்கும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.