மாநில அரசு பாடதிட்டம் அல்லாத பிற வாரிய பள்ளிகள்- சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., ஐ.பி. உள்ளிட்ட அனைத்து வகையான பிற வாரிய பள்ளிகள் – பள்ளி கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்று இயங்குதல்

மாநில அரசு பாடதிட்டம் அல்லாத பிற வாரிய பள்ளி முதல்வர்கள்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 18(1)ன்படி அனைத்துவகையான பள்ளிகளும் அரசின் அங்கீகாரம் பெற்றே இயங்க வேண்டும் எனவும் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இயங்க அனுமதிக்கக்கூடாது எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்ள்ளது. எனவே, தமிழ்நாடுபள்ளிக் கல்வித்துறையின் அங்கீகாரம் பெறாமலும், தொடர் அங்கீகாரம் இல்லாமலும் செயல்பட்டுவரும் மாநில பாட வாரியம் அல்லாத சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., ஐ.ஜி.சி.எஸ்.இ., ஐ.பி., போன்ற பள்ளிகளுக்கான விவரங்களுடன் சார்ந்த பள்ளி முதல்வர்கள் 08.03.2018 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் முதன்மைக்கல்விஅலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.