நினைவூட்டு-ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினிகள்- 2018-2019ஆம் கல்வியாண்டு- 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் வழங்கியது – மீதமுள்ள மடிக்கணினிகளை உடனடியாக நாளை 03.11.2020 காலை 10.00 மணிக்கு கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் சமர்பிக்கக் கோருதல்

அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில்  12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் (Bonafide Certificate) விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. இணைப்பபிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி  2018-2019ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்குமாறு  அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான ஓருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு வழங்கியது போகவுள்ள  மடிக்கணினிகளை  கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தும் இந்நாள் வரை ஒப்படைக்காத பள்ளி தலைமைஆசிரியர்கள் நாளை 03.11.2020 காலை 10.00 மணிக்கு உடன் சமர்பிக்குமாறு சார்ந்த தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

2018-2019-CostFree Laptop