2017-18 ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் –விவரம் கோருதல்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2017-18 ம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்று அதன்பின்னர் கல்லூரிக் கல்வி அல்லது பட்டய படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையினை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 07.10.2020 பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்