அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும் மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர்/ மூத்த பட்டதாரி ஆசிரியரிடம் பொறுப்பு மற்றும் ARF படிவத்தினை ஒப்படைத்துவிட்டு விடுவித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விடுவிப்பாணையின் ஒரு நகல் மற்றும் ARF படிவத்தினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும் மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் அனைத்துவகை ஆசிரியர்களையும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் விடுவித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.