அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்/ ஆசிரியர்கள்,
மேல்நிலைப்பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி சார்பான ஆசிரியர் பட்டியலில் எவரது பெயரேனும் விடுபட்டிருப்பின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் ஏதேனும் ஒரு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் கலந்துகொள்ள வேண்டும்.
அனைத்து முதுகலை ஆசிரியர்/தொழிற்கல்வி ஆசிரியர்கள்/ கணினி பயிற்றுநர்கள் தங்கள் பணி மூப்பு பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருப்பின் சார்ந்த முகாம் அலுவலரை 27.05.2020 அன்று காலை 8.30 மணிக்கு நேரடியாக அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேல்நிலை தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி முக்கியத்துவமாக உள்ள நிலையில் உரிய நாட்களில் முடிக்க ஏதுவதாக அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்