ALL DEOs/CUSTODIANS/CENTRE CHIEFS – வினாத்தாள்கள் போதுமான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என சரிபார்த்தல் சார்பாக அறிவுரைகள்

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ கட்டுகாப்பு மைய தலைமையாசிரியர்கள்/ தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,

நடைபெறவுள்ள மேல்நிலைப்பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 தேர்விற்கான வினாத்தாட்கள் எண்ணிக்கையினை (NR –அடிப்படையில் தங்கள் மைய இணைப்பு பள்ளி தேர்வர்கள் எண்ணிக்கை உட்பட) கட்டுக்காப்பு மையத்தில் போதுமானதாக உள்ளதா என சரிபார்த்து உறுதி செய்து சான்று இணைப்பில் உள்ள  படிவங்களுடன்  (முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு என தனித்தனியாக) சார்ந்த கட்டுக்காப்பு மையத்தில் 21.02.2020க்குள் ஒப்படைக்க அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்கள் சரிபார்த்து தொகுத்து மாவட்டக்கல்வி அலுவலரிடமும், மாவட்ட கல்விஅலுவலர்கள் தங்கள் கல்வி மாவட்ட அளவில் தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்குப்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வு நேரத்தில் ஏதேனும் மொழிப்பாடம் மற்றும் பிறமொழி (தெலுங்கு, உருது, அரபிக்) அல்லது இதர பாடங்களுக்கு வினாத்தாள் பற்றாக்குறையாக உள்ளது என தெரியவரின் சம்மந்தப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மைக்கண்காணிப்பாளரே முழு பொறுப்பேற்க நேரிடும். எனவே, இதனை கருத்தில் கொண்டு தங்கள் தேர்வு மையத்திற்கு போதுமான வினாத்தாட்கள் பெறப்பட்டுள்ளதா என 21.02.2020  மாலைக்குள் வினாத்தாள் கட்டுக்காப்பாளருடன் உறுதி செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்.