இடிக்க வேண்டிய பள்ளிக்கட்டங்கள் விவரம் கோருதல் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் சார்பாக
மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும், அக்கட்டிடம் பற்றிய விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ5’ பிரிவில் (18.10.2019க்குள் ) சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுதலை தடுக்கும் பொருட்டு பள்ளி வளாகத்தில் ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்க வழிவகை செய்ய சார்ந்த தலைமையாசிரிய்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இணைப்பில் உள்ள சுகாதார உறுதி மொழி மற்றம் வாராந்திர அறிக்கை படிவம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து உறுதிமொழியினை இறைவணக்க கூட்டத்தில் மேற்கொள்ளும்படியும். வாராந்திர அறிக்கையினை ஒவ்வொரு வியாழக்கிழமையும் வேலூர், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பும்படியும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE FORM
CLICK HERE TO DOWNLOAD THE PLEDGE
CLICK HERE TO DOWNLOAD THE WEEKLY REPORT FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.