27.05.2020 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு அனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

27.05.2020 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தங்கள் பள்ளியை சார்ந்த முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து விடைத்தாள் மையத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) பணி விடுவிப்பாணையை ஆசிரியரின் Whatsapp-ற்கோ அல்லது ஆசிரியரின் மின் அஞ்சலுக்கோ அனுப்பி விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

2) இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் பேருந்து வசதி கோரியுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டு பணிக்கு வரும் ஆசிரியர்கள் பேருந்து கட்டணத்தை  செலுத்தி மதிப்பீட்டு மையங்களுக்கு வருகைபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3) சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எவரேனும் இருந்தால் அவர்களை அருகாமையில் உள்ள எதேனும் ஒரு  மதிப்பீட்டுமையத்தில் பணியை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST

CLICK HERE TO DOWNLOAD THE VELLORE DISTRICT LIST

CLICK HERE TO DOWNLOAD THE RANIPET DIST LIST

CLICK HERE TO DOWNLOAD THE TIRUPATTUR DISTRICT LIST

CLICK HERE TO DOWNLAOD ALL ROUTE DETAILS