14வது தேசிய வாக்காளர் தினவிழா 2024 -அனைத்து வாக்குச் சாவடி மையங்கள்/ வாக்குச்சாவடி நிலையங்கள் (All Designated Locations / All Polling Stations) பள்ளிகள் வருகின்ற 25.01.2024 அன்று திறந்திருக்க தகவல் தெரிவித்தல் – சார்ந்து
பெறுநர்,
தலைமையாசிரியர்
அரசு உயர்/மேல்நிலை/ நகரவை/ உதவிபெறும் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
14வது தேசிய வாக்காளர் தினவிழா 2024 அனைத்து வாக்குச் சாவடி மையங்கள்/வாக்குச்சாவடி நிலையங்கள் (All Designated Locations / All Polling Stations) வருகின்ற 25.01.2024 அன்று வாக்குச்சாவடி மையங்களாக உள்ள அனைத்து வகை பள்ளிகள் காலை 9.00 மணியளவில் திறந்து வைக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கலாகிறது. மேற்காண் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு கண்காணிக்கப்படுவதால் தலைமையாசிரியர்கள் தவறாமல் பள்ளி திறக்க மீள அறிவுறுத்தப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
214-A1-Election-pollingDownload
polling-station-regDownload