அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/பகுதிநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி/நிதியுதவி/பகுதிநிதியுதவி பள்ளிகளில், மேல்நிலைப்பிரிவுகளில் 2022-2023ஆம் ஆண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தேச தேவைப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.07.2022 (இன்று) பிற்பகல் 3.00 மணிக்குள் velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட பிரதியினை 21.07.2022க்குள் அனுப்பிவைக்குமாறு அரசு/நகராட்சி/ நிதியுதவி/பகுதிநிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்