2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில்  தேர்ச்சி பெற மாணவர்களை  ஊக்குவிக்கும் வகையில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி உரிய நாளில் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இதுகுறித்து பாட வாரியாக  கையேடுகள் முதன்மைக் கல்வி அலுவலக edwise vellore Website –ல்  àdata-வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் Edwise Vellore àDataàuser id –paassword பயன்படுத்தி  பாடவாரியாக கையேடுகள் பதிவிறக்கம் செய்து தேர்ச்சி பெறாத  மாணவர்களுக்கு வழங்கி இணைப்பில் தரப்பட்டுள்ள பாட வாரியாக கீழ்க்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெறும் சிறப்பு வழிகாட்டி மையத்திற்கு மாணவர்களை  பொறுப்பு ஆசிரியர்களுடன் அழைத்து வர அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.     

 தங்கள் பள்ளியில் 11 –ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் விவரம் பாடம் வாரியாக மற்றும் தேர்விற்கு விண்ணபித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களின் விவரங்களை இணைப்பில் காணும் Google Sheet -ல் பதிவு செய்து அதன் நகலினை தங்கள் ஒன்றியங்களுக்கு ஓதுக்கப்பட்டுள்ள தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க  அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மீள  தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1GEkVTBX_1pfvC8r7QYTeFl6f9BbAjMTsHF3Wlx5upGA/edit?usp=sharing

இணைப்பு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.