2022-2023ம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இணைப்பில் காணும் படிவத்தில் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பூர்த்தி செய்து 16-08-2022 அன்று நடைபெறும் 1st Midterm வினாத்தாள் பெற வருகை புரியும் போது வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலிருந்து படிவத்தினை பெற்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.