Month: November 2021

2016-2017 மற்றும் 2019 ஆண்டுகளில் வேலை நிறுத்தப் போராட்டதில் கலந்துக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோரின் போராட்டக் காலம் மற்றும் தற்காலிக பணி நீக்க காலம் பணிக்காலமாக முறைப்படுத்திய அரசாணையினை நடைமுறைப்படுத்துதல் சார்பு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசாணை மற்றும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு வேலுர் மாவட்டக் கல்விஅலுவலர், அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு ceo-letterDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் வேலுர் மாவட்டக் கல்விஅலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்

அனைத்துவகைப் பள்ளிகளில் – தொடர் மழை முன்னெச்சரிக்கை – மாணாக்கர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட), இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து , தொடர் மழை குறித்த மாணாக்கர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்பான அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Safety-measures-08.11.2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

SCHOOL HEALTH WELLNESS AMBASSADOR TRAINING TO SCHOOL TEACHERS – PROGRAMME UDER AYUSHMAN BHARAT – பயிற்சியில் பள்ளிக்கு 2 ஆசிரியர்களை கலந்துகொள்ள அனுப்பிவைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க/ நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி, இணைப்பில் உள்ள அட்டவணையின்படி நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ள பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து சார்ந்த தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது. பயிற்சியில் வழங்கப்படும் வருகைச்சான்றின் நகலை வேலூர், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். School-Health-Wellness-Ambassador-TrainingDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி 08.11.2021 (இன்று) மழையின் காரணமாக அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது

CIRCULARS
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி 08.11.2021 (இன்று) மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியல் வாரியாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல், விடைத்தாள் நகல் வழங்க கோரி விண்ணப்பங்கள் அளித்தல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மூலம் பெறப்பட்ட செய்திக்குறிப்பினை பள்ளி தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1-Sept-2021-result-releaseDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 – மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்குதல் அறிவுரை மற்றும் நெறிமுறைகள் வெளியிடுதல் சார்பு

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்டரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 - மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்குதல் அறிவுரை மற்றும் நெறிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது., அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்டரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1-and-2-2021-2022-Internal-mark-Proceedings1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்டரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அமைச்சுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உத்தேச பெயர் பட்டியல் வெளியிடுதல் சார்பு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலர் அலுவலகம், வேலுர் ,மாவட்டக் கல்வி அலுவலர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகர்கள் மற்றும் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு முறையான கண்காணிப்பாளர் பணியிலிருந்து நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு பணி மாறுதல் ,  உதவியாளர் பணியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு மற்றும் இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிலிருந்து உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வுகள்  வழங்க 15.03.2021 நாளின்படி உத்தேச தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதம் மூலம் இணைத்து அனுப்பப்படுகிறது. அச்செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்

NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர் விவரத்தினை 05.11.2021க்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, NEET தேர்வு எழுதிய மாணவ/ மாணவியர் பெயர்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து 05.11.2021க்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அமைச்சுப் பணியாளர்களுக்கான பவானி சாகர் அடிப்படை பயிற்சிக்கு தகுதியுள்ள இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் விவரங்கள் கோருதல்

அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அமைச்சுப் பணியாளர்களுக்கான பவானி சாகர் அடிப்படை பயிற்சிக்கு தகுதியுள்ள இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளராக பணிபுரிந்து வரும் பணியாளர்கள் விவரங்கள் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொள்ளுமாறு அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள். திரு. ச. சுரேந்தர் பாபு , உதவியாளர், 9442273554 / 9488880036 Bavanisagar-Training-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர்‘ அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

06-11-2021 அன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு தீபாவளி பண்டிகை , உள்ளுர் விடுமுறை போன்ற தொடர் விடுமுறைக் காரணமாக வருகின்ற 06-11-2021 அன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரிடமிருந்து ஆணை பெறப்பட்டுள்ளது. எனவே வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 06-11-2021 அன்று பள்ளி விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு 06.11.2021-School-LeaveDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.