Month: September 2021

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அமைச்சுப்பணியிடங்கள் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை மற்றும் விவரங்களை 06.09.2021 அன்றைய நிலவரப்படி www.edwizevellore.com இணையதளத்தில் 08.09.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அமைச்சுப்பணியிடங்கள் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை மற்றும் விவரங்களை 06.09.2021 அன்றைய நிலவரப்படி www.edwizevellore.com இணையதளத்தில், இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக 08.09.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -1603-JA-ASST-VACANCY-DETAILS-Download CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2021 – பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

அனைத்து உயர் , மேல்நிலைப் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2021 பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், தலைப்பெழுத்து , பிறந்த தேதி போன்ற திருத்தங்கள் இருப்பின் சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள User ID & Password பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொள்ள 08-09-2021 முதல் 11-09-2021 வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறது. இறுதி மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் உள்ளது என கருத்துருக்கள் பின்னர் பெறப்பட்டால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மீது உரிய நடவடிக்கை மே

AZADI KA AMRIT MAHOTSAV – COMMEMORATE THE 75TH ANNIVERSARY OF INDIA’S FREEDOM- CELEBRATION OF INDIA’S 75 YEARS OF INDEPENDENCE COMMENCED 75 WEEKS PRIOR TO INDEPENDENCE DAY 2022 AND WILL EXTEND UPTO INDEPENDENCE DAY 2023

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, AZADI KA AMRIT MAHOTSAV - COMMEMORATE THE 75TH ANNIVERSARY OF INDIA'S FREEDOM- CELEBRATION OF INDIA'S 75 YEARS OF INDEPENDENCE COMMENCED 75 WEEKS PRIOR TO INDEPENDENCE DAY 2022 AND WILL EXTEND UPTO INDEPENDENCE DAY 2023. COPY OT THE LETTER FROM THE DEPUTY SECRETARAY TO GOVERNMENT IS CIRCULATED. ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO TAKE NECESSARY ACTION IMMEDIATELY. LETTER FROM DEPUTY SECRETARY FOR GOVERNMENT 75..Download LETTER FROM THE JOINT SECRETARY 75Download LETTER FROM DEPUTY SECRETARY REGARDING FIT INDIA FREEDOM RUN 2.0 208.Download CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE

2021 -2022-ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவத்திற்கான விலையில்லா சீருடைகள் பேர்ணாம்பட்டு, மற்றும் குடியாத்தம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படும் விவரம்

CIRCULARS
வேலூர் கல்வி மாவட்ட அரசு / நகராட்சி / ஆதிந /  நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2021 -2022-ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவத்திற்கான விலையில்லா சீருடைகள் பேர்ணாம்பட்டு, மற்றும் குடியாத்தம் ஒன்றியங்களில் உள்ள  பள்ளிகளுக்கு கீழ்காணும் விவரப்படி வழங்கப்படவுள்ளது  சார்ந்த தலைமையாசிரியர்கள் உரிய INDENT படிவத்தை சமர்ப்பித்து 2-SETS சீருடைகளை பெற்றுச்செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  வ.எண்நாள்ஒன்றியங்கள்சீருடைகள் வழங்குமிடம் 108.09.2021 முதல்பேர்ணாம்பட்டுஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு 208.09.2021 முதல்குடியாத்தம்நேஷ்னல் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் மாவட்டக்கல்வி அலுவலரின் அறிவிப்பு -MESSAGEDownload மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்

01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நடைபெறுதல் – கொரோனா தொற்று தென்படும்பட்சத்தில் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை / சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள்.... தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Instruction to schoolsDownload

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயகுழு – 2021- 2022 , 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய கோரியது- கால அவகாசம் நீட்டிப்பது – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயகுழு - 2021- 2022 , 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய கோரியது- கால அவகாசம் நீட்டிப்பது சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளை தறவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். FEES-DETERMINATION-FINAL-1677-2021Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர் அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் -கோவிட் -19 கொரோனா தீ நுண்மி காரணமாக குழந்தைகளின் பெற்றோர் இறப்பு அல்லது ஆதரவற்று இருப்பவர்கள் – சார்பான விவரம் – கோருதல்

மெட்ரிக் பள்ளிகள் - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் -கோவிட் -19 கொரோனா தீ நுண்மி காரணமாக குழந்தைகளின் பெற்றோர் இறப்பு அல்லது ஆதரவற்று இருப்பவர்கள் சார்பான விவரம் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 2472/இ1/2021 நாள் 28.08.2021 ன் படி கோவிட் -19 மற்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தயாரித்த ஆவணத்தின் படி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கல்விக்கான அடிப்படை உரிமையை உறுதி செய்தல், ஆதரவற்ற அல்லது பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமே இழந்த குழந்தைகளைக் கையாள்வதற்கு பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக மேற்காண் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க கீழ்க்காணும் படிவத்தில் உடன் விவரங்கள் கோரப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE FORM COVID-19-PARENTS-DEATH-2735-1Download MATRIC-DIRECTOR-PROCEEDINGS-COVID-19Download பெறுநர் அ

உள்ளாட்சித் தேர்தல் – 2021 – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் படிவங்கள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து பெற்று மீள ஒப்படைத்தல் சார்பு

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகர்கள் கவனத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் 2021 தொடர்பாக வாக்குச்சாவடிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்கள் அடங்கிய படிவங்கள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவு எழுத்தரிடம் 06-09-2021 அன்று காலை பெற்றுக்கொண்டு சார்ந்த ஆசிரியர்களிடமிருந்து படிவத்தில் கையொப்பம் மற்றும் புகைப்படம் ஒட்டி அன்று மாலை 03.00 மணிக்குள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் மாவட்டக் கல்விஅலுவலரின் சிக்கன தந்தி இணைக்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , அன