Month: September 2021

மெட்ரிக் பள்ளிகள்- பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு – உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழு நிர்ணயம் செய்வது – தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகள்- பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு - உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழு நிர்ணயம் செய்வது தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் உள்ளவாறு தங்கள் பள்ளியின் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக தெரிவித்துள்ள அறிவுரைகளை தரவிறக்கம் செய்து உடன் நடைவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். DMS-CircularDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

PFMS -Zero Balance-ல் கனரா வங்கியில் கணக்கு துவங்க அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் , PFMS -Zero Balance-ல் கனரா வங்கியில் கணக்கு துவங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். All-Schools-Zero-Balance-Canara-Bank-Acct-Opening-RegDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு / நகராட்சி / நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) சார்பாக பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2020-2021 நிதியாண்டிற்கான மாநில பட்டயகணக்காரின் தனிக்கை மேற்கொள்ளுதல் விவரம் தெரிவித்தல்

CIRCULARS
அரசு / நகராட்சி / நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ரசு / நகராட்சி / நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) சார்பாக பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2020-2021 நிதியாண்டிற்கான மாநில பட்டயகணக்காரின் தனிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / நகராட்சி / நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RMSA-31_20210909_0001Download SMDC-Audit-Report-Format-2020-2021-1Download RMSA-All-UCs-2021-22Download மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒபக) மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளஅறிவுறுத்தல்

CIRCULARS
பள்ளியில் அனைத்துவகை ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டு விட்டார்களா என உறுதி செய்தல் வேண்டுமெனவும், ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஒன்று/ இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் விவரம் தலைமையாசிரியர் மேசையில் வைக்கப்பட வேண்டுமெனவும்,, தடுப்பூசி போட்டமைக்கான சான்றினையும் 13.09.2021க்குள் பெற்று தொகுத்து வைக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.                         மேலும், பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களிடம் தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் மேற்கூறியவாறு கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென வகுப்பாசிரியர் மூலமாக விழிப்புணர்வினை ஏற்படுத்திடுமாறு  கேட்டுக்கொள்வதுடன் இரு தினங்களுக்குள் சிறப்பு, முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெற்றோர்களுக்கு தெரிவிக்குமாறும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. படிவத்தில் கோரப்பட்ட விவரத்

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி / மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

CIRCULARS
அனைத்துவகை அரசு நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசு,  6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி / மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவர்கள்  சான்று கோரும்போது எவ்வித காலதாமதமின்றி சான்றுகளை சரிபார்த்து உடனடியாக வழங்க அனைத்துவகை அரசு நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

10 மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு 2021 தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெரிவிக்குமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. இணைப்பு sslc-and-1-hall-ticket-download-press-notfication-for-sep-2021-supplement