Month: September 2021

2021-22ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009ன்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கை அனுமதித்த விவரங்கள் EMISல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது. இது நாள் வரை பதிவேற்றம் செய்யப்படாத பள்ளிகள், பதிவேற்றம் செய்யப்படாததற்கான காரணம் கோருதல்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், 2021-22ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009ன்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கை அனுமதித்த விவரங்கள் EMISல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது – இது நாள் வரை பதிவேற்றம் செய்யப்படாத பள்ளிகள், பதிவேற்றம் செய்யப்படாததற்கான காரணம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கும்படி அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Explanation-to-Pvt-Schools-RTE-WSDownload RTE-2021-2022-ADMISSION-REPORT-MATRIC-WSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL HMs – Organising Pan India Essay Competition for school students on elimination of single use plastics and plastic waste management – Submit results and details before 23.09.2021 @ 5.00pm

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, "Elimination of single use plastics and plastic waste management" சார்ந்து Pan India கட்டுரை போட்டி அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நடத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள Guidelines பின்பற்றி தங்கள் பள்ளி மாணவர்களுக்கு இப்போட்டி நடத்தி முடிவுகளை 23.09.2021 மாலை 5.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Guidelines_Annexure_State-UT-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

All HMs/Principals – கோவிட்’19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்களையும் உடனடியாக நாளை காலை 10.30 மணிக்குள் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து GOOGLE FORM-ல் upload செய்யும்படிதெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, கோவிட்'19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்களையும் உடனடியாக நாளை காலை 10.30 மணிக்குள் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து GOOGLE FORM-ல் upload செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்கள் உள்ளீடு செய்து பின் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து Upload செய்யவும். CLICK THIS LINK TO DOWNLOSD THE FORM COVID-19-AFFECTED-AND-CUREDDownload CLICK HERE TO ENTER SCHOOL DETAILS AND UPLOAD EXCEL FORM முதன்மைக்கல்வி அ

2021-2022 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 20.09.2021 அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் 15.09.2021 முற்பகல் 11.00 மணிக்குள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, 20.09.2021 அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் 15.09.2021 முற்பகல் 11.00 மணிக்குள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அரசாணை, விண்ணப்ப படிவம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 15.09.2021 முற்பகல் 11.00 மணிக்குள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) சமர்ப்பிக்கும்படி ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BRTE-General-Counselling-proc_20210914_0001Download Go1DNo.134-dt.18.08.2021Download BRTE-Transfer-Application-formDownload முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்

2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – மாநில மற்றும் மாவட்டதிட்ட அலுவலகங்கள், வட்டார வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு 15.09.2021 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல்

2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - மாநில மற்றும் மாவட்டதிட்ட அலுவலகங்கள், வட்டார வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு 15.09.2021 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்படி சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை நாளை (15.09.2021) காலை 8.30 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளத்தக்க வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BRTE-counselling-proc_20210914_0001Downl

உள்ளாட்சித் தேர்தல் பணி – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்கள் ஒப்படைக்காதவர்கள் 14/09/2021 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்கள் வழங்கி சரிபார்க்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கப்பட்டுவிட்டது. ‘ தற்போது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கிடைக்கப்படாதவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யாத படிவத்தினை பதிவிறக்கம் செய்து அப்படிவத்தினை பூர்த்தி செய்து 14.09.02021 இன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு செயல்முறை கடிதம் மற்றும் ப

TO ALL HMs AND PRINCIPALS – மாவட்டக்கல்வி அலுவலக இணையதளம் இனி www.sites.google.com/view/velloredeo/home என்ற முகவரியில் இயங்கும் என தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, மாவட்டக்கல்வி அலுவலக இணையதளம் இனி புதிய முகவரியான www.sites.google.com/view/velloredeo/home என்ற முகவரியில் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, இனி மாவட்டக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கைகள், செயல்முறைகள் மற்றும் கடிதங்கள் அனைத்தும் மேற்படி புதிய இணையதள முகவரியில் அனுப்பப்படும் எனவும், அனைத்து தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி வருங்காலங்களில் இந்த புதிய இணையதளத்தினை பயன்படுத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்

EMIS சார்ந்த பணிகள் முழுமையாக செய்து முடிக்க அனைத்துவகை தொடக்க/நடுநிலை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்

CIRCULARS
EMIS சார்ந்த பணிகள் முழுமையாக செய்து முடிக்க அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சார்ந்த வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உதவியுடன் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள பணிகளை செய்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணி உடனடியாக முடிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். EMIS-Reg-Proceeding-130921Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.