Month: September 2021

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் 2021-க்கான இரண்டாம் தேர்தல் பயிற்சி வகுப்புகள் 29-09-2021 அன்று நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்ட ஆட்சியரின்உத்தரவின்படி  நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தேர்தல் பணியில்   அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியரல்லாத பணியாளர்கள் 29-09-2021 அன்று நடைபெறும் இரண்டாம் கட்ட  தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உள்ளதால்  மாவட்ட ஆட்சியர் அவர்களின்ஆணைக்கிணங்க அனைத்துவகை பள்ளிகளுக்கும்   29-09-2021அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தேர்தல் பணிக்கான ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் குறித்த நேரத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 30-09-2021 வியாழக்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து  ஆசிரியர்கள்/ பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   PROCEEDINGS 2734-a1-2nd-E

அனைத்து நகராட்சி / அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உள்ள இருப்பு விவரம் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து நகராட்சி / அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,  வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி / அரசு உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் உள்ள 31.08.2021 அன்றைய நிலவரப்படி உள்ள இருப்பு தொகையினை இணைப்பில் காணும்  படிவத்தில் பூர்த்தி செய்து 30.09.2021 க்குள் நேரில் இவ்வலுவலக அ4 பிரிவில் சமர்ப்பிக்குமாறு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகராட்சி உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS AND FORM 6498-A4Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022 ஆண்டிற்கான போட்டி – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று – மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/தாளாளர்/ முதல்வர்களுக்கு, 2021-2022 ஆண்டிற்கான போட்டி - நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/தாளாளர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 3000-Tamil-ValarchiDownload TAMIL-VALARCHI_20210928_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது 2021-2022 – இந்த ஆண்டிற்கான புதிய பதிவுகள்  பதிவு செய்ய தெரிவித்தல்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது 2021-2022 – இந்த ஆண்டிற்கான புதிய பதிவுகள் பதிவு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி நடுநிலை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் - புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது 2021-2022 - இந்த ஆண்டிற்கான புதிய பதிவுகள்  பதிவு செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நிதியுதவி நடுநிலை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 15.10.2021 CEO PROCEEDINGS - 2652-b1Download Inspire-Instructions_20210927_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் – பள்ளி மாணவர்களுக்கு – மழைநீர் சேகரிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் - பள்ளி மாணவர்களுக்கு - மழைநீர் சேகரிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS OF THE CEO 2957-b1Download 40798-N2-S1-2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளியில் இயங்கும் SPC (Student Police Cadet) திட்டத்தின் சார்பாக 27.09.2021) மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை ந டைபெறவிருக்கும் Webx meeting கூட்டத்தில் தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ சார்ந்த பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பள்ளியில்  இயங்கும் SPC (Student Police Cadet) திட்டத்தின் சார்பாக 27.09.2021) மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவிருக்கும் Webx  meeting கூட்டத்தில்  தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் தவறாமல் பங்கேற்குமாறு தெரிவிக்கப்படுகிறது. There will be a special webinar meeting of DGP training on coming Monday  between 4 to 5pm.. So requested to assemble SPC Nodal officer of all schools in our range sir .. Please inform all nodal officers and students.. POLICE TRG COLLEGE https://ptchq.webex.com/meet/ptctechnicalwing | 1847259178 Join by video system Dial ptctechnicalwing@ptchq.webex.com You can also dial 210.4.202.4 and enter your meeting number

All Categories of School HMs/ Matric Principals – உள்ளாட்சி தேர்தல் 2021 – தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு ஆணை கிடைக்கப்பெறாதவர்களின் விவரங்களை ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் EPIC No. உள்ளீடு செய்ய தெரிவித்தல் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியரகள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, உள்ளாட்சி தேர்தல் 2021 - தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு ஆணை கிடைக்கப்பெறாதவர்களின் விவரங்களை ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் இணைப்பினை Click செய்து Ctrl+F பயன்படுத்தி தங்கள் பள்ளி மற்றும் பெயருக்கு நேரே EPIC No. உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.