Month: August 2021

KALVI THOLAIKATCHI மற்றும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு All India Radio மூலம் ஒலிபரப்பப்படும் வகுப்பு விவரங்கள் தெரிவித்தல்

KALVI THOLAIKATCHI மற்றும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு All India Radio மூலம் ஒலிபரப்பப்படும் வகுப்பு விவரங்கள் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்டு மாதம் முழுவதும் ( 2 முதல் 27ம் தேதி வரை ) (28-சனி, 29-ஞாயிறு, 30 விடுமுறை) கல்வி தொலைகாட்சி மூலம் ஒளிபரப்பப்படும் நாள் மற்றும் பாடவாரியாக விவரங்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு All India Radio மூலம் 1 மணி நேரம் ( 5 pm  முதல் 6.00pm வரை) பாடங்கள் ஒலிபரப்படும் விவரங்கள் கீழே இணைப்பில்கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டள்ள அட்டவணையை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கும்பொருட்டு,  பள்ளி அறிவிப்பு பலகையில் மாதந்தோறும் ஒட்டி வைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE  TO DOWNLAOD THE TIME TABLE FOR KALVI THOLAIKATCHI CLICK HERE TO DOWNLOAD TAHE TIME TABLE FOR ALL IND
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 05.08.2021 அன்று வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 05.08.2021 அன்று வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 05.08.2021 அன்று வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது. அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாள் : 05.08.2021 இடம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர் காலை 10.00 மணி முதல் 11. 00 மணி வரை  கணியம்பாடி, அனைக்கட்டு , வேலூர் புறநகர் மற்றும் வேலூர் நகர் ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகள் காலை 11.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை குடியாத்தம், பேர்ணாம்பட்டு, காட்பாடி, கே.வி.குப்பம் ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிக
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் NAPKIN INCINERATORS பொருத்திய பள்ளிகள் கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தின் படி பள்ளிகள் செயல்பட்ட விவரம் கோருதல்

  அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள்    வேலூர் மாவட்டம்.   வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் NAPKIN INCINERATORS பொருத்திய பள்ளிகள் கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தின் படி பள்ளிகள் செயல்பட்ட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM   CEO, VELLORE
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் 2021–2022 ஆம் ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

அரசு / நிதியுதவி / மெட்ரிக் / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் 2021–2022 ஆம் ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேர்வுகள் – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலாம் அலகுத்தேர்வு நடைபெறுதல்

தேர்வுகள் – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலாம் அலகுத்தேர்வு நடைபெறுதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தேர்வுகள் - 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலாம் அலகுத்தேர்வு - I நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள், TIME TABLE மற்றும் Syllabus பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி அலகுத்தேர்வு-I நடத்திடும்படி  அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS CEO, VELLORE
2021ஆம் ஆண்டிற்கான அரசு/தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் (Online) கலந்தாய்வு மூலம் பயிற்சியாளர்கள் www.skilltraining.tn.gov.in இணைய தளம் மூலம் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள   04.08.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,  அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வேலூர்-10 - 2021ஆம் ஆண்டிற்கான அரசு/தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் (Online) கலந்தாய்வு மூலம் பயிற்சியாளர்கள் www.skilltraining.tn.gov.in இணைய தளம் மூலம் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள   04.08.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயிற்சியாளர்கள் (மாணவர்கள்) சேர்க்கை மேற்கொள்ள உதவிடும் வகையில் தங்கள் பள்ளியில்  10/12 வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற, இடைநின்ற/ தோல்வியுற்ற மாணவர்கள் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ’முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வேலூர்.’ CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க தெரிவித்தல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி பார்வை (1)-ல் காணும் விண்ணப்பத்தில் மனுதாரர் இணைப்பிலுள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் உட்பிரிவு 6(3)-ன்படி உரிய நடவடிக்கைக்காக அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது. மனுதாரருக்கு உரிய கால கெடுவுக்குள் அனுப்புமாறும் அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE APPLICANT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்