Month: February 2020

IFHRMS – வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் நடைமுறைப்படுத்துதல் – அனைத்து பணம்பெற்று வழங்கும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள்

IFHRMS – வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் நடைமுறைப்படுத்துதல் – அனைத்து பணம்பெற்று வழங்கும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள்

CIRCULARS
அனைத்து வகை பள்ளிகள்/ அலுவலகங்களில் பணம் பெற்று வழங்கம் அலுவலர்கள் (DRAWING OFFICERS) கவனத்திற்கு, IFHRMS - வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் நடைமுறைப்படுத்துதல் - அனைத்து பணம்பெற்று வழங்கும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள  மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளிகள்/ அலுவலகங்களில் பணம் பெற்று வழங்கம் அலுவலர்கள்  (DRAWING OFFICERS) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DISTRICT COLLECTOR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
முதுகலையாசிரியர்களின் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் மடிக்கணினிகள் வழங்குதல் சார்பாக

முதுகலையாசிரியர்களின் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் மடிக்கணினிகள் வழங்குதல் சார்பாக

CIRCULARS
அரசு/ஆதி திராவிடர் நல/ வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, தற்போது பள்ளியில் பணிபுரியும் முதுகலையாசிரியர்களுக்குத் தேவையான மடிக்கணினிகளை பெற்றுக் கொள்ள கீழ்காணும் செயல்முறைகளைப் பதிவிறக்கம் செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ஆதி திராவிடர் நல/ வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான ஒரு நாள்  IEDSS பயிற்சி நடைபெறுதல்

அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான ஒரு நாள் IEDSS பயிற்சி நடைபெறுதல்

சார்ந்த அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான ஒரு நாள் IEDSS பயிற்சி நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள ஆசிரியர்களை செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND LIST OF TEACHERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவுகள் நீங்கலாக) மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டமை – எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவுகள் நீங்கலாக) மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை இணைப்பில் கொடுக்ப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்திசெய்து 18.02.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பினை Click செய்து மாணவர் வங்கிக்கணக்கு துவங்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை விவரத்தினை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்  தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு- நாளை, 15.02.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை கால அட்டவணை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி / மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு, நாளை, 15.02.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் நாளை, திங்கட்கிழமை கால அட்டவனணயினை பின்பற்றி   வகுப்புகள் நடத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகப்புத் தாட்கள் -விடுப்பட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்-மறு அச்சு செய்வதற்கு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யக் கோருதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய  தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம் - தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகப்புத் தாட்கள் -விடுப்பட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்-மறு அச்சு செய்வதற்கு விவரங்களை சார்ந்த தேர்வு மையத்தின் தலைமைஆசிரியரின் அளவிலேயே  ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் மற்றும் அது சர்பான அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகளின் முக்கியத்துவம் கருதி எந்தவித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய  தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் மற்றும் அறிவுரைகளை தரவிறக்கம் செய்து பின்பற்றுமா
மேல்நிலை செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2020

மேல்நிலை செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2020

அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.  அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இச்செய்தியின் மீது தனி கவனம் செலுத்தி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Auditing (newly added) 12th computer technology practical question set 12th computer technology practical question set EM 12ம் வகுப்பு கணினி பயன்பாடுகள் செய்முறைத்தேர்வு வினாத்தாள்(தமிழ்) 12th Computer Application Practical Exam Question Paper_English Medium Nursing (Voc) D Nursing (voc) c Nursing (voc) B Nursing (general) Nursing (Voc) A Home Science
2019-20ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மொழித்திருவிழா நடத்துதல் சார்பான அறிவுரைகள்

2019-20ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மொழித்திருவிழா நடத்துதல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   2019-20ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மொழித்திருவிழா நடத்துதல் சார்பான அறிவுரைகள் சார்பாக மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SPD முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20ஆம் கல்வி ஆண்டு . பட்டதாரி ஆசிரியர்களுக்கு சார்ந்த இரண்டு நாள்  பயிற்சி வழங்குதல்

2019-20ஆம் கல்வி ஆண்டு . பட்டதாரி ஆசிரியர்களுக்கு சார்ந்த இரண்டு நாள் பயிற்சி வழங்குதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், 2019-20ஆம் கல்வி ஆண்டு . பட்டதாரி ஆசிரியர்களுக்கு சார்ந்த இரண்டு நாள்  பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்