நினைவூட்டு – 1
தேர்வுத்துறை அறிவிப்பு
வேலூர் மாவட்ட அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 -06-2021 முதல் 17-06.2021 வரை https://apply1.tndge.org/login என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம் இதுவே இறுதி வாய்ப்பு என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது
தற்போது 21-06-2021 வரை திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்திக்கொண்டு உடன் செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.
முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.