Month: July 2019

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது – சார்பாக.

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது – சார்பாக.

CIRCULARS
அனைத்துவகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. புகைப்பட அளவு 25 KB (Width – 150 x Hieght - 175) க்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே, புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு புகைப்படம் மாறியுள்ளவர்களுக்கும், புகைப்படம் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கும் உடனடியாக பதிவேற்றம் செய்யும்படி அனைத்துவகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் கல்வியாண்டிற்கான வினாத்தாள் கட்டணம் செலுத்த தெரிவித்தல்

2019-2020ஆம் கல்வியாண்டிற்கான வினாத்தாள் கட்டணம் செலுத்த தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான வினாத்தாள் கட்டணத்தினை சென்ற ஆண்டைப்போலவே வினாத்தாள் ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைத்து இரசீதினை பெற்றுக்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர் மாவட்ட செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கான ஆலாசனை கூட்டம் 25.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில்  நடைபெறுதல்

அனைத்து கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர் மாவட்ட செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கான ஆலாசனை கூட்டம் 25.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர் மாவட்ட செயலர்கள் மற்றும் பொருளாளர்கள் கவனத்திற்கு, 2019-20ம் ஆண்டிற்கான திட்டமிடுதல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பாக அனைத்து கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர் மாவட்ட செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கான ஆலாசனை கூட்டம் 25.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. வேலூர்/திருப்பத்தூர்/அரக்கோணம்/இராணிப்பேட்டை/வாணியம்பாடி கல்வி மாவட்டங்களைச் சார்ந்த சாரண சாரணியர் செயலர்கள் மற்றும் பொருளாளர்கள் தங்கள் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து விவரங்களுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
CONCERNED HEADMASTERS (LIST ATTACHED) – SEND DETAILS BEFORE 11.00AM ON 24.07.2019 IMPLEMENTATION OF STUDENT POLICE CADET PROGRAMME (SPC)

CONCERNED HEADMASTERS (LIST ATTACHED) – SEND DETAILS BEFORE 11.00AM ON 24.07.2019 IMPLEMENTATION OF STUDENT POLICE CADET PROGRAMME (SPC)

CIRCULARS
/REMINDER/ CONCERNED HEADMASTERS (PENDING SCHOOL LIST ATTACHED), SEND   list of 20 students in 7th, 8th and 9th Standards studying in your school BEFORE 11.00 AM  ON 24.07.2019  TO CEO MAIL ( velloreceo@gmail.com) in Excel format regarding IMPLEMENTATION OF STUDENT POLICE CADET PROGRAMME (SPC). This is most urgent . Pay special attention. உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்புவதில்  சுணக்கம் ஏற்படுவதால் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக விவரங்களை அனுப்பிவைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PENDING SCHOOLS .                                                                                             FORM ------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின்  பாராளுமன்ற தேர்தலுக்கான ஆணை பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 24.07.2019 அன்று நடைபெறும்  தேர்தல் பயிற்சி சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின்  பாராளுமன்ற தேர்தலுக்கான ஆணை பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 24.07.2019 அன்று நடைபெறும்  தேர்தல் பயிற்சி சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் கலந்துகொள்வதில் இருந்து விலக்கு  அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
ALL HMs/ PRINCIPALS – பள்ளி வளாகத்தூய்மை மற்றும் பராமரித்தல்

ALL HMs/ PRINCIPALS – பள்ளி வளாகத்தூய்மை மற்றும் பராமரித்தல்

CIRCULARS
1) அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2) வட்டாரக்கல்விஅலுவலர்கள் மற்றும் தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்  பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.  மாணவர்கள் கழிப்பறை தூய்மையாக இருக்கும்வண்ணம்  பராமரிக்கப்படவேண்டும். குடிநீர் வசதி சுத்தமாகவும், போதுமானதாகவும் இருக்க வேண்டும். தொடு உணர் வருகைப்பதிவு (BIO-METRIC)  முறையாக செயல்படுத்தும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளி நேரம் முடிந்த பின், அலுவலக நேரமாகிய மாலை 5,45 மணிவரை தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் இருத்தல் வேண்டும். வட்டாரக்கல்வி அலுவலங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தேர்தல் முடியும்வரை விடுப்பில் செல்லக்கூடாது. முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை 23.07.2019 அன்று மாலை 5.00 மணிக்குள்  வழங்கக் கோருதல்

சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும்  மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி தேசியப் பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை நாளை (23.07.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்லுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவிற்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரிய
கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை விடுதல் மற்றும் தவறின்றி 24.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  - 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை விடுதல் மற்றும் தவறின்றி 24.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.