Month: April 2019

நினைவூட்டு – மிக மிக அவசரம் – 2019-2020ம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பணியிட விவரம் கோருதல்

நினைவூட்டு – மிக மிக அவசரம் – 2019-2020ம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பணியிட விவரம் கோருதல்

CIRCULARS
  அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பணியிட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து 22.04.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டல் – 2 – மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகள்  சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக

அனைத்து அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத் தொகை (SPECIAL CASH INCENTIVE) - அரசு மற்றும் அரசு உதவிபெறும் (நிதியுதவி பிரிவுகள் மட்டும்) மேல்நிலைப் பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இணைப்பிலுள்ள வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக உள்ளீடு செய்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – தேர்ச்சி அறிக்கை  வழங்க கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – தேர்ச்சி அறிக்கை வழங்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெற்று முடிந்த மேல்நிலைப் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று வெளியிடப்பட்டது. தங்கள் பள்ளியின் தேர்ச்சி அறிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும் படிவம் 2 பூர்த்தி செய்து இரு நகல்கள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 24-04-2019 அன்றுக்குள்  தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 தேர்ச்சி அறிக்கை (Modified Forms) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் முறை கைவிடப்பட்டது- அரசாணையை செயல்படுத்துதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் முறை கைவிடப்பட்டது- அரசாணையை செயல்படுத்துதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்ற முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-04-2019 இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில்  தங்கள் பள்ளி சார்பாக முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. அரசாணை எண் (நிலை) எண் 91, பள்ளிக் கல்வி (அ தே)த் துறை நாள் 11-05-2017 அரசைணையை செயல்படுத்த   அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு  மார்ச் 2019 தேர்வு முடிவுகளுக்குப் பின் விடைத்தாட்கள் நகல் மற்றும்  மறுகூட்டல் விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகளுக்குப் பின் விடைத்தாட்கள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று வெளியிட்ட பின்  பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக விடைத்தாட்கள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆன் லைனில் விண்ணப்பித்தல் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரை கடிதம் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. அக்கடித்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு RV RT Instructions to HM's Mar2019 முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் ப
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் TML மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் TML மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்கள ( +1 arrear subject) தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று  காலை 09.30 மணிக்கு சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் www.peps.tn.nic.in  மற்றும் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு HSE March 2019 Exam TML Distribut
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு,  தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு,  தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தினால்  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கவும், அதில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்திக்குறிப்பினை பள்ளி தகவல் பலகையில் (NOTICE BOARD) ஒட்டி பார்வைக்கு வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PRESS NOTE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 – மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச்செல்ல பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் Sanitary Workers-ஐ Volunteer-ஆக நியமித்தல்

சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரவளமைய மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 – மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச்செல்ல பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் Sanitary Workers-ஐ Volunteer-ஆக நியமித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மற்றும் NSS மாணவர்களை 18.04.2019 அன்று காலை 6.30 மணிக்கு வாக்குச்சாவடி அலுவலர் (Presiding Officer ) முன் ஆஜராகும் வகையில் அனுப்பிவைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரவளமைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.