மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2018 செய்முறைத் தேர்வு காசோலை வழங்குதல்
மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2018 செய்முறைத் தேர்விற்கான உழைப்பூதியம், மதிப்பூதிய தொகை காசோலையாக வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 27-11-2018 முதல் 29-11-2018 வரை வழங்கப்படவுள்ளது. உரிய கடிதம் வழங்கி காசோலை பெற்றுக்கொள்ளுமாறு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
அமைச்சுப் பணியாளர்களுக்கான கணினி பயிற்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை விடுவித்து அனுப்ப கோருதல்
வேலுர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்களுக்கான கணினி பயிற்சி 26-11-2018 முதல் வி ஜ டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற பயிற்சியின் வருகைப் பதிவேட்டினை சரிபார்த்ததில் ஒரு பள்ளியிலிருந்து ஒரு அமைச்சுப் பணியாளர் மட்டுமே வருகை புரிந்துள்ளார் என்பது வருந்த தக்க செயலாக உள்ளது. எனவே நாளை நடைபெறும் பயிற்சியின் போது ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைச்சுப் பணியாளர்களும் கலந்துக்கொள்ளும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அமைச்சுப் பணியாளர்களை பயிற்சிக்கு விடுவித்து அனுப்ப வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு அமைச்சுப் பணியாளர்களை விடுவிக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்க
TO
ALL THE HEADMASTERS AND BLOCK EDUCATIONAL OFFICER,
DEO OF VANIYAMBADI AND THIRUPATHUR EDUCATIONAL DISTRICTS ARE INSTRUCTED TO RELIEVE THE OFFICE STAFF TO ATTEND THE TRAINING AT VIT WITHOUT FAIL. DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE.
VIT-A1-2
To
All Categories of High & Hr.Sec.School Headmasters,
Download the Half Yearly Exam 2018 for 10th, +1. +2 Time table and Second Summative Assessment Time table for 6 to 9 Classes.
CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE FOR Half Yearly Exam 2018 for 10th, +1. +2
CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE FOR HALF YEARLY EXAM 2018 FOR 6 TO 9 STANDARDS
CEO, Vellore
அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு,
22.11.2018 (வியாழக்கிழமை) அன்று நடைபெற இருந்த இடைப்பருவத்தேர்வு 26.11.2018 ( திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
VIT பல்கலைக்கழகத்தில் உள்ள SILVER JUBILE TOWER BLOCKல் உள்ள கணினி மையங்களில் 26.11.2018 முதல் 01.12.2018 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 நாட்கள் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அது சார்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட தேதிகள் திருத்தம் செய்து அனுப்பலாகிறது.
இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி பணியாளர்களை சார்ந்த தலைமையாசிரியர்கள் குறிப்பிட்ட தேதிகளில் கலந்துகொள்ளத்தக்க வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அலுவலர்கள்,
அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர் - பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் விவரம் - ஆண்டுவாரியாக (2014,2015,2016,2017,2018) பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்/பணிவரன்முறை செய்யப்பாடதவர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் ஒப்படைக்கப்படாத தேர்வு மைய தலைமை ஆசிரியர் / முதல்வர்கள் கவனத்திற்கு
பின் வரும் மேல்நிலை பொதுத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
தங்கள் தேர்வு மையத்தில் மார்ச் 2019 தேர்வு எழுதவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு அறைகள் சார்பான விவரங்கள் உரிய படிவத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டும் இதுநாள் வரை ஒப்படைக்கப்படாதது வருந்ததக்க செயலாகும். இனி காலம் தாழ்த்தாமல் கீழ்க்குறிப்பிட்டுள்ள தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் மெத்தன போக்கை தவிர்த்து உடனடியாக துரிதமாக செயல்பட்டு விவரங்களை 23-11-2018 அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.