16-10-2021 அன்று சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

சென்னை பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறை ந.க.எண் 34462 / பிடி1 / இ1 / 2021 நாள் 13-10-2021ன்படி

14-10-2021 மற்றும் 15-10-2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதிநாளான சனிக்கிழமை 16-10-2021 அன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி ஆணை பெறப்பட்டுள்ளது. எனவே வேலுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 16-10-2021 சனிக்கிழமை விடுமுறை நாளாகும் என அறிவிக்கப்படுகிறது.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.