அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் 12-07-2019 அன்று சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர்கள் 15-07-2019 மற்றும் 16-07-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வருகைபுரிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரிமிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்தனுப்பலாகிறது.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.