அனைத்து மேல்நிலை பலளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல் -2023 தொடர்பாக தேர்வு மைய வாரியாக DCS Report -09.01.2023 அன்று அனுப்பப்பட்டது.
மேலும் தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள், தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் 10.01.2023 அன்று சமர்பிக்க தெரிவித்தும் கீழ்க்காணும் பள்ளிகள் இதுநாள் வரை சமர்பிக்காதது வருந்தத்தக்க செயலாகும். DCS report அறிக்கை சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்ப வேண்டி உள்ளதால் உடன் இன்று மாலை 5.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ4 பிரிவில் சமர்பிக்க தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.