06.07.2018 வெள்ளிக்கிழமையன்று அரசு/ நலத்துறை மற்றும் நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டம் கீழ்க்கண்டவாறு அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.
நேரம்
மாலை 4.00 மணி – அரசு/நிதியுதவி மற்றும் நலத்துறை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
மாலை 5.00 மணி – அரசு/நிதியுதவி மற்றும் நலத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
கூட்டப்பொருள்:
- வினாத்தாள் பகிர்வு மையத் தலைமையாசிரியர்கள் பள்ளியிலிருந்து பெறப்பட்ட வினாத்தாள் உத்தேச தேவைப்பட்டியலை ஒருங்கிணைப்பாளரிடம் மற்றும் அதற்கான கட்டணத்திற்கான DDஐ கீழ்காணும் முகவரியில் ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
DD favour of : – CEO DISTRICT COMMON EXAM
Venue: – Sri Venkateswara Hr.Sec.School, Vellore – தினந்தோறும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை
1) 2018-19ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக ஆண்டு சந்தா
உயர்நிலைப்பள்ளிகள் – ரூ.460/-
மேல்நிலைப்பள்ளிகள் – ரூ.660/-
தலைமையாசிரியர் கூட்டத்தில் ‘ஆ5’ பிரிவு எழுத்தரிடம் ரொக்கமாக செலுத்தி உரிய இரசீதினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
2) 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தங்கள் பள்ளியின் அனைத்து வகுப்புகளுக்கான கால அட்டவணை மற்றும் பாட ஆசிரியர்களுக்கான கால அட்டவணை – உயர்நிலைப்பள்ளிகள் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அவர்களிடமும், மேல்நிலைப்பள்ளிகள், நேர்முக உதவியாளர் (மேல்நிலை) அவர்களிடமும் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3) பள்ளி வேலை நேரம் காலை முதல் மாலை வரை.
4) காலிப்பணியிட விவரம் படிவம் -1 மற்றும் படிவம்-2 பூர்த்தி செய்து கூட்டத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
5) மாற்றுத்திறனாளிகள் விவரம் மற்றும் ஆங்கில வழியில பயிலும் மாணவர்கள் விவரம்
மேற்படி விவரங்களை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கும்படி அனைத்துவகை தலைமயாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.