அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 10.06.2023 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் மன்றச் செயல்பாடுகள், கலையரங்கம் மற்றும் உடல்நலம் சார்ந்த பொருண்மைகளைக் குறித்து விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கருத்தாளர்களை பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அந்தந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மூலமாக உரிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து பணிவிடுவிப்பு செய்தனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.9.
பெறுநர்
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.