அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மார்ச் 2024 மாதம் (விடுபட்ட நபர்களுக்கு) மற்றும் ஏப்ரல் 2024 மாதம் பணிபுரிந்த நபர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக IFHRMS இல் Budget ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக Budget இல் ஒதுக்கப்பட்டுள்ள தொகையை சரிபார்த்து உடன் பட்டியல் தயார்செய்து கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறும் பட்டியல் ECS நகல் ஒன்றுடன் பற்றுச்சீட்டு இணைத்து இவ்வலுவகத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் மறுநினைவூட்டிற்கு இடமின்றி செயல்படுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமையாசிரியர்கள்
அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.