வேலூர் மாவட்டம் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பயின்று 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் மாணவர்களை மாதிரி பள்ளியில் சேர தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தகவல் தெரிவித்து மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களுடன் 16.06.2023 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர், சாத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு. மாணவர்களின் பெயர்பட்டியல்,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

சார்ந்த அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.