வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை பொதுத் தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு உயிரியல் / தாவரவியல் / விலங்கியல் முதுகலை ஆசிரியர்கள் ஒதுக்கீடு பெறப்படாதவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மதிப்பீட்டு பணி மேற்கொள்ள தெரிவித்தல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை பொதுத்தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு உயிரியல் தாவரவியல் விலங்கியல் மதிப்பீட்டு பணி மேற்கொள்ள ஆசிரியர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மதிப்பீட்டுப் பணிக்கு 04-06-2022 பிற்பகல் 02.00 மணிக்கு மதிப்பீட்டு பணி மேற்கொள்ளுவம் வகையில் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

1.மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

குறிப்பு கூடுதல் என திருப்பு அனுப்பி வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மேற்காண் பொருள் சார்பான விவரங்களை தெரிவித்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

3. மாவட்டக் கல்வி அலுவலர் இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.