வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (11.11.2022) அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் எழுதியும் மாணவர்களுக்கு தகவல்களை தெரிவிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக்கல்வி / தனியார் பள்ளி)