விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி – 27.05.2020 முதல் தொடங்குதல் – மதிப்பீட்டு மையம் மற்றும் பாடவாரியாக முதன்மைத்தேர்வாளர்/ கூர்ந்தாய்வு அலுவலர் / உதவித்தேர்வாளர் பணி ஒதுக்கீடு – முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து அனுப்ப கோருதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/

மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு,

பார்வையில் காணும் அரசாணைக்கிணங்க  COVID-19 வைரஸ் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உட்பட்டு மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் 27.05.2020 முதல்  அந்தந்த மதிப்பீட்டு மையங்களில் நடைபெற உள்ளது.

இணைப்பில் உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு உரிய நாட்களில் (CE/SO  27.05.2020 மற்றும் AEs 28.05.2020 அன்று) காலை 8.30 மணிக்கு முகாம் அலுவலர் முன்பு ஆஜராகும் வகையில் தவறாமல் விடுவித்தனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பிணை Click  செய்து செயல்முறைகள் மட்டும் ஆசிரியர் பட்டியலை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE CE SO AEs DUTY ALLOTMENT REVISED LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்