லோக்சபா 2019 – பொதுத்தேர்தல்கள் – வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Database) ஏற்படுத்துதல் – அறிவுரைகள்

பெறுநர்

1) அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி (ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் நீங்கலாக)  தலைமையாசிரியர்கள்

2)அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்

3) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்

தேர்தல் அலுவலரால் கொடுக்கப்பட்டுள்ள படிவம், சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர்/ வட்டாரக்கல்வி அலுவலர் மூலம்  சார்ந்த அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி/ பகுதி நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தினை படிவத்தில் பூர்த்தி செய்து சார்ந்த தலைமையாசிரியர்/ஆசிரியர்/ பணியாளரிடம் கையொப்பம் பெற்று தங்கள் கையொப்பத்துடன், இணைப்பில் உள்ள சான்று மற்றும் படிவத்துடன்  14.11.2018 முதல் 20.11.2018-க்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு /நகரவை/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள்  ஒன்றியத்திலுள்ள பள்ளிகள் சார்ந்து விவரங்களை படிவத்தில் பூர்த்தி  செய்து இவ்வலுவலகத்தில் ஒப்படைப்பதுடன் LINK-ஐ click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM AND CERTIFICATE

CLICK HERE TO ENTER THE DETAILS IN ONLINE