அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு…
மார்ச் 2021ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வில் பங்குபெற்ற மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மீள ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து, திருத்தங்கள் இருப்பின், திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்