வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சார்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வண்ணம் பள்ளிகளில் உள்ள தகவல் பலகை மற்றும் சுற்றறிக்கை மூலம இவ்விவரத்தினை தெரியப்படுத்துமாறு வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
RT Result _March 2020_ – Press Release
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
முதன்மைக் கல்வி அலுவலர்
திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.