மேல்நிலை முதலாமாண்டு மார்ச் /ஏப்ரல்-2023 பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது,மறுகூட்டல் , மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் /ஏப்ரல்-2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது,மறுகூட்டல் , மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக கீழ்க்குறிப்பிட்டுள்ள  செய்தி குறிப்பினை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளியின்  அறிவிப்பு பலகையில் இது தொடர்பாக மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்பம்.க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்,

 வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )  தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.