மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 – வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியில் பாட முதுகலை ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

// மிக அவசரம்   //   தேர்வுகள் தனி கவனம் //

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலைப் சிறப்பு துணைத் தேர்வு மைய மதிப்பீட்டு முகாம் பணி வேலுர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவருகிறது.

வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியில் பாடம் போதிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை 06-10-2020 அன்று விடுவிக்கப்பட்டு 07-10-2020 அன்று காலை 09.00 மணிக்கு மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

உரிய முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்