அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மே 2022ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் தொடர்பாக விடைத்தாள் நகல் வழங்ககோரி விண்ணபித்த மாணவர்கள் விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்தல் , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பதற்கான செய்திகுறிப்பு சென்னை அரசுத் தேர்வுகள்இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. தங்களது பள்ளிகளில் இச்செய்திக்குறிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகை மூலம் தெரிவிக்கமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
முதன்மைக் கல்விஅலுவலர் வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்விஅலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.