அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மாணாக்கர்களின் பெயர் பட்டியலில் தேர்வர்களது தலைப்பெழுத்து , பெயர் (தமிழ் / ஆங்கிலம் ) பிறந்த தேதி , புகைப்படம் திருத்தங்கள் மற்றும் பள்ளி பெயர் ஆகிவற்றில் திருத்தங்கள் மட்டும் இருப்பின் அதன் விவரத்தினை 23-04-2019 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு ஆகும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.