மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2018 விண்ணப்பங்கள் வேலுர் மாவட்டத்திலுள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள (தேர்வுகள் பதிவு சார்பான) தேர்வுகள் சேவை மையங்களில் 27-08-2018 முதல் 01-09-2018 வரை பெறப்படவுள்ளது. மேலும் மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் ரூ.1000/- கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு அனுமதித் திட்டத்தில் தட்கல் விண்ணப்பங்கள் 03-09-2018 முதல் 04-09-2018 வரை விண்ணப்பிக்கலாம்.
வ. எண் | கல்வி மாவட்டம் | சேவை மையத்தின் பெயர் | பாலினம் |
1 | திருப்பத்துர் | ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி திருப்பத்துர் | மகளிர் |
2 | வாணியம்பாடி | இந்து மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி | இருபாலர் |
3 | வாணியம்பாடி | மஸ்ருலும் மேல்நிலைப் பள்ளி, ஆம்பூர் | ஆண்கள் |
4 | வேலுர் | அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி | இருபாலர் |
5 | வேலுர் | நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் | மகளிர் |
6 | இராணிப்பேட்டை | அரசு மேல்நிலைப் பள்ளி, இராணிப்பேட்டை | ஆண்கள் |
7 | அரக்கோணம் | செயின்ட் ஆன்ருஸ் மேல்நிலைப் பள்ளி, அரக்கோணம் | இருபாலர் |
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
தேர்வுகள் சேவை மைய தலைமை ஆசிரியர்கள் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
நகல்
- மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
அரக்கோணம், இராணிப்பேட்டை, வேலுர், வாணியம்பாடி, திருப்பத்துர் தொடர் நடவடிக்கைக்கு அனுப்பலாகிறது.
- அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்