மிக மிக அவசரம் – தேர்தல் படிவம் சார்பாக ஆய்வு மேற்கொள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வருகை பதிவேடு அசல் மற்றும் நகலுடன் வருகைப்புரிய கோருதல்

அனைத்துவகை அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தேர்தல் அலுவலராக பணிபுரிய தங்கள் பள்ளியில் IFHRMS மூலம் ஊதியம் பெறும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருடைய தேர்தல் படிவம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதனை ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகைப்பதிவேடு அசல் மற்றும் நகலுடன் நாளை (21.01.2021) காலை 10.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியும்படி அனைத்துவகை அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்