அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 30.04.2019 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE CERTIFICATE
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.