மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் –  அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டு 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு (சுயநிதி பிரிவு நீங்கலாக) பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது – ஒரு சில மாணவர்களுக்கு வங்கி கணக்கு விவரம் பதிவேற்றம் செய்யப்படாதது – விடுபட்ட மாணவர்களுக்கு வங்கி கணக்கு விவரம் பதிவேற்றம் செய்யக் கோருதல் – சார்பு

சார்ந்த  அரசு / அரசு உதவிபெறும் உயர் நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டு 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு  (சுயநிதி பிரிவு நீங்கலாக) பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 18.08.2022க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் ஒரு சில மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது எனத் தெரியவருகிறது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விடுபட்ட மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை நாளை (25.08.2022) மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.