சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கபட்டுள்ளது)
சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களில் மாணவர்களின் ACCOUNT NO, IFSC CODE, MICR NO, BANK NAME, BRANCH NAME ஆகிய விவரங்கள் சரிவர பூர்த்தி செய்யப்படாததால் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை மீளவும் சரிசெய்து 13.04.2022க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் இணைப்பிலுள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரி செய்து இதுநாள்வரை பெறப்படவில்லை. எனவே சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி வங்கி கணக்கு விவரங்களை சரிசெய்து 22.04.2022க்குள் velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்