சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது.
இதுநாள் வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி தேசியப் பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை நாளை (23.07.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்லுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவிற்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST